கோவையில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு வென உயர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, நரசீபுரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை கோவையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கோவையில் நிலவி வரும் பனிப்பொழிவு மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக கோவையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் மழையால் அழுகி வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.