ஜனவரி 9-ல் சட்டப்பேரவை கூடுகிறது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை ஆளுநர் ஆர்.என் .ரவி உரையாற்றுகிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கூறியதாவது: “வரும் ஜன. 9-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். பொதுமக்கள் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் முகக் கவசம் தேவையில்லை என்று கூறிவிட்டு, தற்போது முகக் கவசம் அணியுமாறு கூறுகிறது.
சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் முகக் கவசம் அணிந்து வரலாம். எனினும், கொரோனா பரிசோதனை தேவையில்லை.
இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது கேள்வி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்து வருகிறோம்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சருக்கு, பேரவையின் மரபுப்படி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு இடையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.”
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேரவையில் ஆளுநர் உரையாற்றியதும், அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். தொடர்ந்து, அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பெரும்பாலும் 4 நாட்கள், அதாவது ஜன. 12-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் பொங்கல் விடுமுறை வருவதால், அதுவரை மட்டுமே கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.
படிக்கவும்↓
தூத்துக்குடியில் மிளகாய் பொடித் தூவி கணவன் மனைவி வெட்டிக்கொலை!! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!! https://nalaiyavaralaru.com/2022/12/தூத்துக்குடியில்-மிளகாய https://nalaiyavaralaru.com/2022/12/தூத்துக்குடியில்-மிளகாய