சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் இந்த வகையில் கேரள மாநிலத்திற்கு செல்லும் தமிழக எல்லைப்பகுதி மீனாட்சிபுரத்தில்
தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பாக மீனாட்சிபுரம் வழியாக தமிழகத்திற்கு வரும் கேரள மாநில வாகனங்களை மீனாட்சிபுரத்தில் டிசம்பர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று கண்காணித்து பயணிகளிடம் சளி காய்ச்சல் போன்றவை உள்ளதா என கண்காணித்தனர் மேலும் பயணிகளிடம் RTPCR பரிசோதனை செய்து மாநிலத்திற்குள் அனுமதித்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.