தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட உதவி தொகைகள் 13 நபர்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பெண்களுக்கு ரத்த சோர்வு ஏற்படுவதை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
கிராமங்களில் கழிப்பறை வசதி : பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், பெண்கள் திறந்தவெளியில் சென்று மலம் களித்தால் ரத்த சோர்வு ஏற்படக்கூடும். மேலும் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே தான் மத்திய, மாநில அரசுகள் சுகாதார வளாகம் கட்டும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் தேவையான இடங்களிலும், வீடுகள் தோறும் சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.
இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பசுவந்தனை பஜாரில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். பசுவந்தனை பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம அலுவலர் மகாராஜன், பசுவந்தணை பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரம் உட்பட பயனாளிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.