தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வலு தூக்கும் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தலை சிறந்த வீரர்கள் மற்றும் ரயில்வே துறை, தபால் துறை, விமானத்துறை, ராணுவம், அரசு துறைச் சார்ந்த வீரர்களும் பங்கு பெற்றனர்.
இப்போட்டியில் அந்தமான் நிக்கோபார் மாநிலத்தின் சார்பாக 6 வீரர்களும் 1 வீராங்கனையும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அந்தமான் நிக்கோபார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் அவரவர் கலந்து கொண்ட பிரிவுகளில்
கோவிந்தராஜ் என்பவர் மூன்றாவது இடமும் ரஞ்சித் என்பவர் இரண்டாம் இடமும் அறிவு என்பவர் முதல் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு அந்தமான் நிக்கோபார் மாநில வலு தூக்கும் சங்க செயலாளர் A.முகமது ரபிக் மற்றும் அணி பயிற்சியாளர் ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.