கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவைகளும் புளோக் பஞ்சாயத்தில் சுமார் பத்து பஞ்சாயத்துகள் உள்ளடங்கியுள்ளன. இதன் சுற்றுவட்ட பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆதிவாசி இன மக்கள் பலரும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தேவைகளும் பிளாக் பஞ்சாயத்தில் இருந்து சிறுநீரக டயாலிசிஸ் சென்டர் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மின் இணைப்பு வழங்க பல மாதங்களாக ஆட்சியரும் துணை ஆட்சியரும் அனுமதி கொடுக்காத காரணத்தால் இன்னும் டயாலிசிஸ் சென்டர் இயக்கப்படவில்லை.
இந்த இடைப்பட்ட காலதாமதத்தில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உயிரை துச்சமாக எண்ணிய ஆட்சியர் மீதும் துணை ஆட்சியர் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டும் என்று நீதிமன்றத்தின் மனித உரிமை ஆணையத்தையும் அனுகபோவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை உடனடியாக அரசு தலையிட்டு மக்களுக்கு உபயோகப்படும் காரியங்களில் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த சமூக ஆர்வலர்களின் தரப்பிலும் மக்கள் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்.
மூணார்.