தொடர்ச்சியாக யானை குட்டிகள் மரணம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மூன்று யானைக் குட்டிகள் இறந்துள்ளன. கடைசியாக டிசம்பர் 24ஆம் தேதி மேலும் ஒரு யானை குட்டி இறந்து உள்ளது.
தொடர்ச்சியாக யானை குட்டிகள் இறப்பு ஏற்படுவதால் உடனடியாக வனத்துறையினருக்கு அதனை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது. தற்போது இறந்த யானையின் இறப்பிற்கு காரணத்தை அறிய ஆந்திராவில் காக்கிநாடாவில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின்னரே இதனுடைய பின்னணி என்ன என்று தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் யானையின் பாதுகாப்புகளை கருதி வனத்துறையில் இன்னும் அதிகமான ரேஞ்சர்கள் வேண்டும் என்ற கோரிக்கையும் வனதுறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.
One Response