கோவையில் நம்ம ஊரு சந்தை என்ற இயற்கை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நம்ம ஊரு சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள், சிறு தானியங்கள், மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, குழம்பு பொடி, மளிகை பொருட்கள், காய்கறிகள், கீரைகள் பழங்கள், நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டைகள், பாரம்பரிய இனிப்பு கார வகைகள், மூலிகை தேநீர் மற்றும் ஊறுகாய், வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
மேலும் மண்பாண்ட பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள், சாப்பிடுவதற்கு மதிய உணவு, பழச்சாறு நீரா பானம் எனும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊர் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. எண்ணெய் வாங்க பாத்திரம், பொருட்கள் வாங்க துணிப்பை எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.