நோயாளிகளை விரட்டும் செவிலியர்! – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் கழிஞ்சூரில் இயங்கி வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மதியம் 2 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் சளி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது பணியில் இருந்த செவிலியர் பிரேமாவதி அவரிடம் இப்போது பார்க்க முடியாது நீங்கள் சென்று மூன்று மணிக்கு மேலே வாருங்கள் என்று கூறி அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நோயாளி வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.
இம்மருத்துவமனைக்கு மருத்துவர் சரியாக வருதில்லை எனவும் சொல்லப்படுகிறது. செவிலியர் பிரேமாவதி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வதில்லை எனவும், மிரட்டும் தோணியில் செயல்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்; “இம்மருத்துவமனையில் மருந்துகளும் சரியாக வழங்குவது இல்லை , ஊழியர்களுக்கு செல்போன் பார்க்கவே நேரம் இல்லை பின்னர் எப்படி நோயாளியை பார்பார்கள் என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P. இரமேஷ் வேலூர்.