பரதாலயம் இன்ஸ்டியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி!!
கோவை கிக்கானி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நட்ராஜ் கலையரங்கத்தில் பரதாலயம் இன்ஸ்டியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ் சார்பில் குரு நித்யா ரத்னா அமுதா தண்டபாணி ஆசியில், குரு மாதுள கிஷோர் முன்னிலையில் மாணவிகள் சங்கவி மற்றும் தாரணி ஆகியோரின் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அனுஷாம் டான்ஸ் குரூப் கலை இயக்குநர் நரேந்திர குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ ரவி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரங்கேற்றம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசுகையில், குரு அமுத தண்டபாணி அவர்களின் நாட்டிய பள்ளியில் சங்கவி மற்றும் தாரணி ஆகியோரின் அரங்கேற்றம் மிக சிறப்பாக நடைபெற்றது. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேலும் இந்த கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு வேண்டுகிறேன். மார்கழி மாதத்தில் இந்த அரங்கேற்றம் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இந்த கலையை பொதுமக்கள் மென்மேலும் வளர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவிகள் சங்கவி மற்றும் தாரணியின் அரங்கேற்ற நிகழ்ச்சியை பெற்றோர் பார்கவி, கார்த்திகேயன் டாக்டர் குகன், டாக்டர் ஆதித்யா குகன் மற்றும் பலர் கலந்துகொண்டு பார்த்து ரசித்தனர்.
அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு நட்டுவாங்கம் அமுத தண்டபாணி மற்றும் மாதுள கிஷோர், குரல் பவானி கிஷோர் குமார், மிருதங்கம் சென்னை கேசவன், வீணை கடையநல்லூர் சங்கரநாராயணன், புல்லாங்குழல் தஞ்சாவூர் வசந்தகுமார், தொகுப்பு கவிஞர் சுந்தரராமன், அலங்காரம் கோவை மகேஷ் மற்றும் தீபா மகேஷ், பின்னணி கோவை மகேஷ் கலையகம், ஆடை வடிவமைப்பு பிரவீனா, ஒளி மற்றும் ஒலி அபு, புகைப்படம் மற்றும் வீடியோ ஐயப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.