பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சார் ஆட்சியரிடம் மனு…!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் (19/12/2022) மக்கள் குறை தீர்க்கும் நாளான நேற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஆனைமலை மேற்கு பகுதி ஆத்து பொள்ளாச்சி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு பகுதிக்கு செல்லும் பைப் லைன் உடைந்து ஒரு வாரத்திற்கும் மேற்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உப்பு தண்ணீர் கலந்து வருவதாகவும் இது போல் அடிக்கடி நடப்பதால் சாலை பழுது ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அதை உடனே சரி செய்து தருமாறு கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நலத்திட்டங்கள் மாநிலச் செயலாளர் விஜயலட்சுமி சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
உடன் பொள்ளாச்சி நகர செயலாளர் பரமகுரு மற்றும் பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.