பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை பெண்மணி!!
கோவை: வீடுகளுக்குள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும் விழிப்புணர்வை கோவையை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏற்படுத்தி வருகிறார்.
மக்கள் தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இதனால் பிராணவாயு என்பது குறைந்து கொண்டே வரக்கூடிய சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தாவரங்களை வளர்க்கும் விதமான முயற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கோவையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். இதனை உணர்த்தும் விதமாக கோவையில் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய பிராணவாயுவை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய செடிகள் கண்காட்சி வைத்துள்ளார்.
வீடு மற்றும் அலுவலகங்களில் அழகிற்காகவும், மன அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் இந்த செடிகள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் என்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.