மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் சட்டமீறலை கண்டித்தும்,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை (7/12/2022) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இந்தக் கடையடைப்பு போராட்டத்தில், மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் மண்டி உரிமையாளர் சங்கம், மாத வாடகை வியாபாரிகள் பொதுநலச் சங்கம், ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.
இது தொடர்பாக சங்கத் தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரை மத்திய மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் பல்வேறு அத்துமீறல்கள் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ஆம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.” என்று சுட்டிக்காட்டினர்.
அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி நாளை (7ஆம் தேதி) கடையடைப்பு நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மதுரை மத்திய மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– பாரூக்.