மழைக்காலங்களில் உருவாகும் தற்காலிக நீச்சல் குளம்?.. கண்டுகொள்ளுமா துறை சார்ந்த நிர்வாகம்..!!!…
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் மேலே ரயிலும் கீழே மற்ற வாகனங்களும் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிய நாள் முதல் இன்று வரை மழைக்காலங்களில் நீச்சல் குளமாக தான் இது உள்ளது. இதனால் வாகனங்கள் சில கிலோமீட்டர்கள் வேறு பாதையில் செல்ல வேண்டிய நிலை சில நேரங்களில் மட்டுமே இதற்கு தற்காலிக தீர்வாக மின்மோட்டார் வைத்து நீரை வெளியேற்றுகின்றனர். ஒரு சில நேரங்களில் அதுவும் இல்லை.
மழைக்காலங்களில் பழுதடைந்த வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இதற்கு நிரந்தர தீர்வு எப்பொழுது? கண்டு கொள்ளுமா துறை சார்ந்த நிர்வாகம்?..
நாளை வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.