கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வருடத்தின் அதிகமான மழை பெய்ததாலும் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைவாக திறந்து விடப்பட்டதாலும் தற்பொழுது முல்லை பெரியாரின் அணை நீர்மட்டம் உயர்ந்து 140.25 அடி முழு கொள்ளளவை கொண்டு காணப்படுகின்றன .
இந்த நிலை தொடர்ந்தால் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் உடனடியாக தமிழ்நாட்டிற்கு அதிகமான நீர் கொள்ளளவை கொடுக்க தமிழ்நாடு அரசிடம் கேரளா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் சார்ந்துள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்.
மூணார்