மூணார் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் மகிழ்ச்சியில் கிராம மக்கள்!!!

மூணார்

மூணார்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சார்ந்த வெல்லியா மட்டம் பஞ்சாயத்தில் கோலிப்பள்ளி என்ற கிராமம் ஆனது காட்டிற்குள் அமைந்துள்ளது. இவர்கள் வந்து செல்லும் வழி பாதையின் இடையில் குறுக்கே ஒரு ஆறு இருப்பதால் சில மழை பெய்யும் சூழ்நிலைகளில் இவர்கள் மற்ற பகுதிகளுக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதிகமான தண்ணீர் வரத்தினால் அந்த கிராமத்திலிருந்து தேவையான பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாது. மழைக்காலங்களில் யாருக்காவது உடல்நலப் பிறவி ஏற்பட்டால் கூட அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் ஒரு வேலை வெள்ளம் அதிகமாக வரும் பட்சத்தில் அங்கு வந்த மக்கள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் பல நாள் அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை.

சுமார் 70 வருடமாக முயற்சி செய்தும் எந்த அரசாங்கமும் இங்கு பாட அமைத்து வசதி செய்து தரவில்லை என அப்பகுதியில் நீண்ட வருடங்களாக வசிக்கும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆட்டின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்ற கனவு தகர்ந்த பொழுதில் அந்த கிராம மக்களை ஆட்டின் மேற்பகுதியில் இரண்டு மரங்களை இணைத்து மூங்கில்களான பாலத்தை தற்காலிகமாக செய்து அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியை பார்வையிட்ட இடுக்கி மாவட்டத்தின் வளர்ச்சி கமிஷன் அதிகாரியான அர்ஜுன் பாண்டியன் அவர்கள் இப்பகுதியை பார்வையிட்ட பொழுது இந்த கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்து தருவதாக கூறி சென்றார். பல நாட்களாகவே திரும்பத் திரும்ப கேட்ட வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாத நாள் கிராம மக்கள் அப்படியே விட்டு விட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆனால் கிராம வளர்ச்சி அதிகாரியான அர்ஜுன் பாண்டியன் அவர்கள் இதற்கு உடனடியாக தீர்வு காண சுமார் 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து உடனடியாக பாலம் வேலையை ஆரம்பிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp