கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் பொதுவாகவே டிசம்பர் மாதம் துவங்கி விட்டால் குளிர்காலம் ஆரம்பித்து விடும்.
ஜனவரி மாத துவக்கத்திலேயே கடும் குளிர் உருவாகி வெப்பநிலையானது மைனஸ் டிகிரி வரைக்கும் செல்லும் ஆனால் இந்த வருடத்தில் டிசம்பர் மாத துவக்கத்திலேயே குளிர் காலம் மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சில தினங்களாகவே கடும் குளிர் காணப்படுகிறது இதனால் அங்கு வேலை செய்யும் மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளன.
அது மட்டுமல்லாமல் உலக வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்த வருடம் மற்ற வருடங்கள் காட்டிலும் அதிகமாகவே குளிர் இருக்கும் காரணம் வடக்கு பகுதியில் இருந்து வீசும் பனிப் காற்றானது சற்று பலம் வாய்ந்து காணப்படுகிறது என தகவல் அளித்துள்ளனர்.
இச்சூழலிலும் மூணாறில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது கால சூழல் நிலை சற்றே மாறுபட்ட அமைவதால் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கே வசிக்கும் மக்களும் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன். மூணார்.