வனவிலங்குகளை கொன்று இறைச்சியை விற்றதாக பொய்யான வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் கைது!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே ஆட்டோவில் வனவிலங்குகளின் இறைச்சி விற்பதாக கீழ்காணம் பகுதியில் வைத்து கன்னாம்படியில் வசித்து வரும் ஆதிவாசி இனத்தவரை சேர்ந்த இளைஞரான சருண் சஜி என்பவரை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அந்த இளைஞர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தவறான வழக்கு பதிந்துள்ள உண்மை தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பொய்யாக வழக்கு பதிந்த மொத்தம் ஏழு வனத்துறை அதிகாரிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்தனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நீதி வேண்டும் என்று கூறி ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை கமிஷனுக்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குமுளியில் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு தவறாக வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்ய எஸ் சி மற்றும் எஸ் டி கமிசன் ஆணயைர் வி.எஸ் மாவோஜி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்ந்து உப்புத்தறை காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர் வழக்கில் பொய்யான வழக்கு பதிந்தற்காகவும் அவரை தாக்கியதற்காகவும், வனத்துறை அதிகாரிகளான மகேஷ் மற்றும் சிபின்தாஸ் மற்றும் அனில் குமார் மற்றும் இதில் இடைபட்டுள்ள அனைத்து வனத்துறை அதிகாரிகள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல் கட்டமாக மூவரையும் கைது செய்து முட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதற்குப் பின்பு வழக்கு விசாரணை தொடரப்பட்டு சரியான தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.