கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் தொடுபுழையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் மாவட்ட அளவிலான பள்ளிக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பல பகுதியில் இருந்தும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசபக்தியை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொதுவாகவே கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழ் வழி கல்விகள் இருந்தாலும் கூட அதிகமாக மலையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் கூட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மலையாளம் சார்ந்த பாடல்களோ அல்லது நடன நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வார்கள் ஆனால் ராகுவாரை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சற்று வித்தியாசமாக தமிழில் தேச பக்தி பாடல்களை பாடி அசத்தினர்.
அவர்கள் பாடிய பாடல்கள் அனைவருடைய மனதையும் கவர்ந்தது.
அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வகுப்பறை அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன். மூணார்.