வால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி கால்பந்து வீரர்களை கௌரவப்படுத்திய வால்பாறை கால்பந்து சங்கம்.
கோவை மாவட்டம் வால்பாறை கால்பந்து சங்கத்தின் தலைவர் பிரமேஸ் தலைமையில்
மனித உரிமைகள் கழகம் மற்றும் வால்பாறை காவல்துறை மற்றும் வால்பாறை கால்பந்து சங்கம் இணைந்து கடந்த நாட்களில் கால்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடிய வால்பாறை அரசு உயர்நிலைபள்ளி கால்பந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.
கோப்பையை மனித உரிமைகள் கழக தேசிய தலைவர் முஸ்தபா பட்டாம்பி
மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் அம்மா கற்பகம் ஆகிய இருவரும் இனைந்து வழங்கினார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அரசுப்பள்ளி கால்பந்து அணியின் பயிற்ச்சியாளர் ராகவனை வால்பாறை
கால்பந்து சங்கம் சார்பாக மேடையிலேயே கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நிகழ்ச்சி நேற்று சரவணா கிரேண்ட் பகுதியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.