கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் விக்னேஷ்வரா பேக்கரியின் ஒண்டிப்புதூர் கிளையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேக் வாங்க மக்கள் ஆர்வம்.
கோவை காந்திபுரம் இரத்தினபுரி,சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இனிப்பு மற்றும் கார வகைகள்,துரித உணவு, ஜூஸ் வகைகளை விரும்பும் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்ற விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேக் விற்பனையில் டிரெண்டாகி உள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக கடந்த கொரோனா கால நேரத்தில் பொதுமக்களின் உணவு தேவையை கருதி , விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் உரிமையாளர் விக்னேஷ் ஆலோசனைப்படி ரொட்டி விற்பனையில் இந்திய மற்றும் தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் மையம் அனைத்து கிளைகளிலும், தரமான இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டுமின்றி தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கேக் விற்பனை களை கட்டி வருகின்றது.
இது குறித்து விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் மேலாளர் சிந்தியா கூறுகையில்,தற்போது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு,அனைத்து தரப்பினரும் கேக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும்
தற்போது டிரெண்டாக உலக கோப்பை கால்பந்து மற்றும் உலக சேம்பியன் அர்ஜெண்டினா தொடர்பான கேக்குகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்வதாக கூறிய இவர் எங்களது விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடைகளின் இனிப்பு மற்றும் கார வகைகளின் தனி சுவையை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
– சீனி, போத்தனூர்.