வேலை தேடி வந்த இளைஞர்களிடம் வழிப்பறி! காவல்துறை தேடுதல் வேட்டை!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரிகளான 22 வயதான பூபதி, 24 வயதான வீரபாண்டி, இவர்கள் 2 பேரும் சரவணம்பட்டியில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக நேற்று அதிகாலை 1. 15 மணியளவில் பண்ருட்டியில் இருந்து கோவை காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு வந்து இறங்கினார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஆவாரம்பாளையத்தில் உள்ள நண்பரின் அறைக்கு நடந்து சென்றனர். அவர்கள், பாரதியார் ரோடு தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது 4 பேர் கும்பல் திடீரென்று வழிமறித்து, அவர்கள் 4 பேரும் சேர்ந்து பூபதி, வீரபாண்டி ஆகியோரை அரிவாளால் வெட்டி 2 செல்போன்கள், ரூ. 3 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த அவர்கள் 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.