2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா திமுக?- கடம்பூர் ராஜு கேள்வி !!!
தமிழ் நாடு முழுவதும் திமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு மற்றும் வரி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால்: .
“2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க திமுக தாயாரா? கடம்பூர் ராஜு கேள்வி.
தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வச்ச ஆட்சி திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்குவேன் என்று கூறினாரா…? சொல்லாததையும் செய்வேன் என்பதற்கு இதைத்தான் அவர் கூறினாரா ..?” கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
“மகளிர்க்கு மாதம் 1000 மற்றும் நீட் தேர்வு ரத்து என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது செய்ய வேண்டும். 18 மாதம் ஆட்சியில் மகளிர்க்கு 18000 ஆயிரம் கடன்காரர்கள் திமுக ஆட்சி . அதிமுக ஆட்சியில் தமிழர்கள் திருவிழா பொங்கலுக்கு 1000 வழங்கியது.
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம். தற்போது வரை மொத்த சினிமாவையும் திரைக்குப் பின்னால் தங்கள் கையில் வைத்திருந்தனர். இனிமேல் நேரடியாக தாங்களே வைத்துக் கொள்வார்கள். சினிமா துறையே அவர்கள் கண்ட்ரோலில் கொண்டு வந்து விடுவார்கள்.
பின்னர் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓடையில் சுற்று சுவர் மற்றும் ஒடை அமைக்கும் பணி இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.” என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவி சத்யா,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,மாவட்டம் அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர பொருளாளர் ஆரோக்கியராஜ்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.