அனுமதியின்றி விளம்பரப்பலகை வைத்ததால் வழக்கு
பதிவு!!
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் பத்ரகாளி, இவர் நேற்று மதுக்கரை மார்க்கெட் சாலையில் உள்ள பதிவாளர் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு 12 அடி உயரம் கொண்ட ப்ளெக்ஸ் பேனர், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, பொங்கல் விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டு இருப்பதை கண்டார், காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பன்னிரண்டு அடி உயரத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த பாரதிய ஜனதா கட்சியின் சுந்தராபுரம் மண்டல தலைவர் முகுந்தன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.