இரண்டு வாரங்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் நெடுங்கண்டம்??
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகில் உள்ள நெடுங்கண்டம் என்ற பகுதியில் குடி தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள். நெடுங்கண்டம் அருகில் உள்ள கள்ளார்குட்டி ஆற்றில் இருந்து தண்ணீர் இயந்திரம் மூலமாக எடுக்கப்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள்,கடைகள்,தங்கும் விடுதிகளுக்கும் அரசு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இயந்திர கோளாறு ஏற்பட்டதின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அவதிப்படுவாத குற்றம் சாட்டியுள்ளார். அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவதால் இப்பிரச்சினை தொடர்ந்து நிகள்வதாகவும் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு இயந்திர கோளாறு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு சரியான நிரந்தர தீர்வை காணவேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.