இராஜமலை சுற்றுலா தளம் விரைவில் மூடப்படுகிறது!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் இராஜமலை பகுதியில் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்கா முன்னதாகவே அடைக்க வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளன.
இராஜமலை இரவிகுளம் தேசிய பூங்கா எப்பொழுதும் பரபரப்பாகவும் அதிக வாகன போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தும் இடமாகவும் அமைந்திருக்கும் இப்பகுதியில் உலகில் அரிய வகையான வரை ஆடுகள் காணப்படுகின்றன. பல நாடுகளில் இருந்தும் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். வருடத்தின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இனபெருக்கத்திற்காக தேசிய பூங்கா அடைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே சில வரை ஆடுகள் இனபெருக்கதை துவங்கியதால் உடனடியாக இந்த மாதம் முதலே பூங்காவை அடைக்க உத்தரவு தர வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே இம் மதாம் முதல் பூங்கா அடைக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.