கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜிஎஸ் சமீரன், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆணையர், உத்தரவின்படி,
கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள சாலையோரம், செயல்பட்டு வரும் உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகள், ஆகியவற்றை கடந்த 10 ம்தேதி மற்றும், 13ம் தேதி, ஆகிய தேதிகளில் சிறப்பு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது,
மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் கோவையில் உள்ள சுமார் 278 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ், பெறப்படாமல் 95 கடைகள் இயங்கி வருவது தெரியவந்துள்ளது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி சூடான உணவு பொருட்களை பார்சல் செய்த, 31 கடைகளுக்கு 2000 ரூபாய், வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தமாக, 62, 000 ரூபாய், அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. , மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 44 கிலோ பழைய மற்றும் கலர் சேர்க்கப்பட்ட உணவு பொருள்கள் பறிமுதல் செய்ப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 9620 ஆகும் என கோவை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.