ஒரே நாளில் 212 இடங்களில் பொதுமக்களுடன் போலீஸார் கலந்தாய்வு நடைபெற்றது!!
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, அனைத்து காவல்நிலைய போலீஸாரும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினருடன் கலந்தாய்வு மேற்கொள்ளவும், அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை போலீஸார் நேற்று முன்தினம் 79 குடியிருப்போர் நலச் சங்கத்தினர், 93 குடிசை மாற்று வாரிய பகுதிகள், 40 காவல் சிறார் மன்றங்களில் உள்ளோரிடம் கலந்தாய்வு நடத்தினர். சந்தேக நபர்கள் குறித்தும், குற்றச் சம்பவங்கள் குறித்தும் அறிய நேர்ந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், தேவை ஏற்பட்டால் காவல்துறை உதவி எண் 100,அவசர உதவி எண்112, பெண்கள் உதவி மையம் எண் 1091, முதியோர் உதவி மையம் எண் 1253, குழந்தைகள் உதவி மையம் எண் 1098 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின் 24 மணி நேர உதவி குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையிலும் இதுபோன்ற கலந்தாய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.