குடியரசு தினவிழாவினை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர பரிசோதனை – ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படு கின்றனர். தண்டவாளங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம்.