குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்த கோவை மேயர்!!
கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 1000 ரூபாய், பச்சை அரிசி, சர்க்கரை, மற்றும் கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னேடுத்துள்ளது, இதனை தொடர்ந்து இன்று, 29வது, வார்டுக்கு உட்பட்ட, கணபதி பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில், கோவை மாநகராட்சி மேயர், கல்பனா ஆனந்தகுமார் இந்த தொகுப்பை வழங்கி, இந்த திட்டத்தை துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சரண்யா, செந்தில்குமார், ரங்கநாயகி, ராமச்சந்திரன், என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.