கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட திட்டுவிளை மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர் கேட்டை உருவாக்கியிருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
தகுந்த நடவடிக்க எடுத்து உடைப்பை அடைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணை செயலாளர் எஸ்.நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் குடிநீர் மிக முக்கியமான ஒன்று உணவு ஒருவேளை இல்லாவிட்டாலும்கூட இருந்து விடலாம் தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம்.
என்ற சிந்தனையோடு,
-M.சுரேஷ்குமார்.