கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் . இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு இணைக்கும் விதமாக நான்கு சோதனை சாவடிகள் அமைந்துள்ளன போடி மெட்டு, கம்பம் மெட்டு , குமுளி மற்றும் சின்னார் சோதனை சாவடி இதன் வழியாக தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு காய்கறிகள்,பால், இறைச்சி போன்றவை கொண்டுவரப்படுகின்றன.
கொண்டு வருகிற இந்த பொருட்களில் கலப்படங்களும் கெட்டுப் போன உணவு பொருட்களும் இடுக்கி மாவட்டத்திற்கு வருவதாக புகார் அளிக்கப்படுகிறது.
இந்த நான்கு சோதனை சாவடிகளிலும் உணவுகளை சோதனை செய்ய போதுமான சோதனை சாவடிகள் அமைக்கப்படாமல் இருப்பதும் சில சோதனை சாவடிகளில் சோதனை அறைகள் இருந்தாலும் கூட சோதனைகள் செய்யப்படாமல் மிகவும் எளிதாக கெட்டுப்போன உணவு பொருட்களை கொண்டு வருவதாலும் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் கெட்டுப்போன பொருட்களை உபயோகிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர் எனவே கேரளா அரசு உடனடியாக நான்கு சோதனை சாவடிகளில் மற்ற மாநிலங்களில் கொண்டு வரும் உணவு பொருட்களை தரம் மற்றும் சரி பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்மூணார்.