கோவைபுதூர் பகுதியில் தங்கம்,வைரம்,வெள்ளி நகைகளுக்கான என் அண்ட் என் (N&N) எனும் புதிய பிரத்யேக ஷோரூம் துவக்கம்!!
கோவைபுதூர் பகுதியில் என் & என் எனும் புதிய தங்கம்,வைரம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான பிரத்யேக ஷோரூம் துவங்கப்பட்டது.நிர்வாக இயக்குனர்களாக நவீன் மற்றும் நந்தினி ஆகியோர்களாக உள்ள இதன் துவக்க விழா ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.முதல் விற்பனையை பிரபல பேஷன் ஆடை அலங்கார நடன இயக்குனர் கருண் ராமன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
புதிதாக துவங்கப்பட்ட என் & என் பிரத்யேக ஜுவல் ஷோரூமில் , பாரம்பரிய நகைகள், பழமையான நகைகள், விழாக்கால நகைகள், புதுமையாக வடிவமைக்கப்பட்ட நகைகள், அனைத்து பண்டிகை மற்றும் விழாக்களுக்கு அணிய கூடிய வகையில் ஏராளமான டிசைன்களில் உள்ளன. மேலும் பெண்களை அதிகம் கவரும் ஒளிரும் வகையான காதணி, வளையல்கள் . வைர நகைகளில் அழகிய டிசைன்களில், பெண்களை அலங்கரிக்கும் வசீகர நகைகள் விற்பனைக்கு இருப்பதாகவும்,வெள்ளியில் பல்வேறு வகை ஆண்டிக்ஸ் வகை பரிசு பொருட்கள் உள்ளிட்டவை பிரத்யேக டிசைன்களில் உள்ளன…திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் இருப்பதாகவும் நிர்வாக இயக்குனர்கள் நவீன் மற்றும் நந்தினி தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.