கோவையில் பிஎன்ஐ (BNI) தினத்தின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டம்!! காவேரி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் வினோத் சிங் ரத்தோர் வாழ்த்து!!
பி என் ஐ அமைப்பு ஒரு உலக அளவிலான ஒருங்கிணைந்த அமைப்பாகவும் மற்றும் உலகில் நம்பர் ஒன் அமைப்பாகவும் உள்ளது. பி.என்.ஐ அமைப்பானது இவான் மிஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பிஎன்ஐ அமைப்பு கோவை மாவட்டத்தில் பத்தாவது ஆண்டை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்டமாக பி.என்.ஐ தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பிஎன்ஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் பி என் ஐ சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பி என் ஐ உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பி என் ஐ பத்தாம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுவையில், பி என் ஐ அமைப்பு ஒரு உலக அளவிலான ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பி.என்.ஐ
கோவை மாவட்டத்தில் 26 குழுவில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. பி.என்.ஐ -இன் முக்கிய நோக்கம் மற்றவர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதே பி.என்.ஐ-ன் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. பி.என்.ஐ உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இருந்து வருகின்றனர். பி.என்.ஐ -யில் உறுப்பினராக இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
மேலும் பி என் ஐ-யின் பத்தாம் ஆண்டு விழாவில் காவேரி குரூப் ஆப் கம்பெனி முக்கிய ஸ்பான்சராக உள்ளது. காவேரி நிறுவனம் பிவிசி பைப், யு பிவிசி பைப், போர்வெல் பைப், எலக்ட்ரிகல் பைப் மற்றும் 7 வண்ணங்களான வாட்டர் டேங்க் போன்றவை சிறந்த தரத்தில் உற்பத்தி செய்து வருகின்றோம். இன்று ‘ஃபீல் தி ஹீட்’ என்ற வாட்டர் டேங்க் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். காவேரி நிறுவனத்தின் நோக்கம் 2035 ஆம் ஆண்டில் 8,500 கோடி மதிப்பில் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க காவேரி நிறுவனம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.