கோவை காந்திபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!
உரிமையாளர்கள் எதிர்ப்பால் பரபரப்பு!!
கோவை காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் பல்வேறு மொபைல் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு சென்று வருவதற்கான சாலைகளை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து டிஜிட்டல் போர்டுகள் வைப்பது, சாலையை மறைத்து ஏ போடு வைப்பது, சாலையை மறைத்து படிக்கட்டுகள் கட்டுவது, என்று பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி ஆணையர் பிரதாப், உத்தரவின் பேரில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது, மேலும் அங்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பல நிறுவனத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காட்டூர் காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் உதவியுடன் அனைத்து ஆக்கிரமிப்புகளும் நேற்று இடித்து அகற்றப்பட்டு மாநகராட்சி வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.