கோவை திண்டுக்கல் இடையில் சிறப்பு ரயில்!!
பழனி முருகன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்கு தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: –
கோவை – திண்டுக்கல் இடையே இன்று (27-ந் தேதி), நாளை (28-ந் தேதி) மற்றும் 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய 6 நாட்கள் பழனி முருகன் கோவில் கும்பாபிேஷகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி இந்த நாட்களில் காலை 9. 20 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 11. 43 மணிக்கு பழனியை சென்றடையும. பிற்பகல் ஒரு மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். இதேபோல திண்டுக்கல்- கோவை சிறப்பு ரெயில் மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு பழனியை சென்றடையும். மாலை 5. 30 மணிக்கு கோவையை வந்தடையும்.
இந்த ரெயிலானது போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.