கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் நேற்று மாலை நான்கு மணி அளவில் அ.இ.அ.தி.மு.க வினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுகவின் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது மக்களின் அத்தியாவசிய தேவையான பால்,
மின்சாரம், உள்ளிட்டவை விலை அதிகரித்து உள்ள நிலையில் மக்களின் அடிப்படை தேவையாக உள்ள பொருட்களின் விலையை உயர்த்துவதை கண்டித்து அதிமுக பகுதி செயலாளர் A ரஃபீக் அவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ . எட்டிமடை சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இதில் கழக முன்னோடிகளும் ஆண்களும் பெண்களும் கழகத் தொண்டர்களும் திரளாக கலந்துொண்டு விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டன குரல் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போத்தனூர் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர் ஈஷா மற்றும்,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.