கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக பிப்ரவரி 05 பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கடந்த வாரம் 15/01/2023 மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் பேச்சு மற்றும் குழு நாடக போட்டிக்கான முதல் சுற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களுக்கான இறுதி சுற்று நிகழ்ச்சி நேற்று (22/01/2023) மாலை 4 மணியளவில் மாவட்ட மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் மூடநம்பிக்கை, பெண் உரிமை, இன்றைய முஸ்லிம்களின் நிலைமை, வரதட்சணை, தீண்டாமை மற்றும் சமுதாயம் சார்ந்த தலைப்புகளில் உரைகளும், குழு நாடகங்களும் இடம் பெற்றது.
இறுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியர்களுக்கு,
பேச்சு போட்டியில் இரு வயது பிரிவில் முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசுகளும், குழு நாடக போட்டியில் கலந்த முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசுகளும், கட்டுரை போட்டியில் முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதில் TNTJ கோவை மாநகர் மாவட்ட தலைவர் S.அஜ்மல், செயலாளர் சைபுத்தீன், பொருளாளர் இப்ராஹீம், துணை தலைவர் ஜமால், துணை செயலாளர்கள் ரியாஸ், சாபித் மற்றும் ஆஷிக் அஹ்மத் அவர்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் அதிகமாக கலந்து கொண்டது சிறப்பான
நிகழ்வாக அமைந்தது என நிகழ்ச்சி ஏற்பாட்டின்
நிர்வாகிகள் தெரிவித்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.