கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் 21 வயதான சூரிய பிரகாஷ், சிஎன்சி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்த இவரின் நண்பர் மதுக்கரை அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ் இவருடன், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் பாலக்காடு சென்றுள்ளனர், பின்னர், மீண்டும் நேற்று, இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர் சூரிய பிரகாஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். கோவை மாவட்டம் நவக்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பால் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இதில், சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் நித்திஷ், படுகாயங்களுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கந்தே கவுண்டன் சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.