சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமையன்று (21.01.2023)
மின்தடை! மின் வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணைமின்நிலையங்களில்,எதிர்வரும் 21.01.2023 சனிக்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சிங்கம்புணரி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சிங்கம்புணரி நகர், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி மற்றும் என்பீல்டு பகுதிகளிலும், அ.காளாப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் காளாப்பூர், S.V.மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் 21.01.2023 சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 5 வரை மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.