சிறந்த தொழில் முனைவோர்களாக சாதனையாளர்களின் அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது!!
சிறந்த தொழில் முனைவோர்களாக ஆக, சாதனையாளர்களின் அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில்,நடைபெற்றது..
கோவை: உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான தேவை அதிகரித்து வருவதாகவும் இந்த சந்தர்ப்பத்தை இளம் தலைமுறையினர் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவார்களாக, மாற முடியும் என தமிழகத்தை சேர்ந்த பிரபல அமெரிக்க வாழ் தொழிலதிபர் ராஜன் உடையார் கோவையில் தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறை மாணவ,மாணவிகளின் தொழில் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக,சிறந்த தொழில் முனைவோர்களாக ஆக, சாதனையாளர்களின் அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில்,நடைபெற்றது..
சிறந்ந தொழில் முனைவு மற்றும் தொழில் வழிகாட்டி எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், .அமெரிக்காவில், தகவல் தொடர்பு, தொழில்துறை, நிதி, சில்லறை வணிகம், சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்து உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க வாழ் தமிழர் ராஜன் உடையார் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,எதிர் கால உலக பொருளாதார வளர்ச்சியில் மருத்துவம் தொடர்பான துறை முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகவும்,எனவே இந்த துறைகளில் மாணவ,மாணவிகள் தங்கள் திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் உள் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மருந்து,பிசியோதேரபி போன்ற துறைகளில் தேவை அதிகரித்து வருவதாகவும் இந்த சந்தர்ப்பத்தை இளம் தலைமுறையினர் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவார்களாக மாற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கு துவக்க விழாவில்,சேரன் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் டீன் செல்வராணி,நர்சிங் கல்லூரி முதல்வர் மீனா குமாரி,ஃபார்மசி கல்லூரி முதல்வர் தீபா,துணை முதல்வர் நாகராஜா,துறை தலைவர் அருணா உட்பட மாணவ,மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.