தனது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 215 குழந்தைகளும் உணவு சமைத்து சாப்பிட வைத்து மகிழ்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை!!
கோவை கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் க. மகாலட்சுமி. இவரது பிறந்த நாள் வியாழக்கிழமை (ஜன. 19).
இதை தனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கொண்டாடும் விதமாக அவர்கள் அனைவருக்கும் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி சமைத்து எடுத்து வந்து உடன் சாப்பிட்டு மகிழ்திருக்கிறார். அவர்கள் பள்ளி மட்டும் இல்லாது அருகில் உள்ள ஐஓபி காலனி மாநகராட்சி பள்ளியிலும் பயிலும் 40 குழந்தைகளுக்கும், கல்வீரம்பாளையம் அரசு அங்கன்வாடிக்கு வரும் 25 குழந்தைகளுக்கும் உணவு சமைத்து வழங்கினார்.
கூடவே, கல்வீரம்பாளையம் அரசு பள்ளிக்கு மாணவர்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் ட்ரம்களை இன்று வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக, இதை தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் (அப்போது 240 மாணவர்கள் எண்ணிக்கை) குடும்பத்துக்கு மளிகை பொருட்கள், காய்கறி ஆகிய பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.