தமிழ்நாடு அரசு சார்பில் திவான்சாபுதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்!!கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆனைமலை திவான்சாபுதூர்
கிராமத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திவான்சாபுதூர் ஊராட்சி செயலாளர் ராசு என்கிற ராஜகாளியப்பன்,
ஸ்கூல் PTA தலைவர் பவித்ரா குமார், ஆனைமலை வடக்கு ஒன்றிய பொருளாளர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் திவான்சாபுதூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து கால்நடை வளர்போரும் மற்றும் விவசாயிகளும் தங்களின் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
இம்முகாமில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
அந்த வகையில் மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை,கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல்,
ஆண்மை நீக்கம்,சினைப்பரிசோதனை,செயற்கை முறை கருவூட்டல்,சுண்டுவாத அறுவை சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல்,
ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அழைக்கப்பட்டது. மற்றும்
தாது உப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும்
சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் தீவனப்பயிர் வளர்ப்பு,பறவைக்காய்ச்சல்,விவசாயக்கடன் அட்டை, கால்நடை காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுத் தகவல் அளிக்கப்பட்டது.
திவான்சாபுதூர் சுற்றியுள்ள கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை இம்முகாமிற்கு கொண்டு வந்து பயனடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.