திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்!!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் தைப்பூசம் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று தை பொங்கல் திருநாளை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை திருநாளை முன்னிட்டு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தை மாதப்பிறப்பு உத்திராயண புண்ய காலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.