திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.திருப்பூர் ஒன்றிய அளவிலான மருத்துவ முகாம், அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.காது மூக்கு தொண்டை, கண், எலும்புமுறிவு, நரம்பியல், மனநலம், குழந்தைகள் நல மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். கருவிகள் மூலம், கண், காது பரிசோதனை செய்யப்பட்டது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறியதாவது:முதல் முகாம், அரண்மனை புதுார் பள்ளியில் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய (நேற்று) முகாமில், 16 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட மொத்தம் 58 பேருக்கு, புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு உபகரணங்கள் கேட்டு 12 விண்ணப்பங்கள் ; வங்கி கடனுக்கு 7 மாதாந்திர பராமரிப்பு தொகை கேட்டு எட்டு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.,) கேட்டு, 48 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.
முக்கியமா கவனிங்க…வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது வட்டார அளவிலான முகாம் நடைபெறுகிறது; எனவே, கலெக்டர் அலுவலக முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– பாஷா.