துளிர் பவுண்டேஷன் மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி:
கோவை மாவட்டம் துளிர் பவுண்டேஷன் மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி இணைந்து இன்று சாலை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீதியரசர் AS ரவி BSC ML அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதனைத் தொடர்ந்து கல்லூரி இயக்குனர் திரு D ராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இன்றைய கால சூழ்நிலையில் விபத்துகள் அதிகரித்து உள்ள நிலையில் இது போன்ற சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நீதியரசர். மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மேலாளர் D.ராஜன் அவர்கள் கூறுகையில், துளிர் பவுண்டேஷன் என்ற அமைப்பு இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்து கல்லூரி வாயிலாக இணைந்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இன்றைய சாலை நிலையை கவனத்தில் கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மிகுந்த கவனமாக பயணிக்க வேண்டும் என்று கூறினார்.
துளிர் நிறுவனத்தின் செயலாளர் ஆண்டனி சேவியர் BA BL பிரசிடெண்ட் அப்துல் சமது ஜேசு ராஜா MSCBL அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். மாணவர்களுக்கு இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதோடு அதைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து வாகனங்களில் எட்டு போடுவது, கோலம் போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
–தலைமை நிருபர் ஈசா,
ராஜேந்திரன்.