தூத்துக்குடியில் மையவாடியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது கொலை – கொத்தனார் கைது!

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மகாராஜா (40), பிளம்பர். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை ஒட்டி இவர் குடும்பத்தை பிரிந்து தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு உள்ள மையவடியில் இரவு படுத்து தூங்குவாராம். அப்போது தூத்துக்குடி ராஜீவ் நகர் 10வது தெருவை சேர்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மாரிமுத்து கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தினசரி இரவு மது அருந்திவிட்டு மையவாடி ஒட்டி உள்ள ரோட்டில் படுத்து தூங்குவார்களாம். இன்று மாலை 6 மணியளவில் கல்லறை மீது இருவரும் அமர்ந்து மது குடித்தார்களாம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, அருகில் கிடந்த பெரிய கட்டைால் மகாராஜாவை சரமரியாக தலையில் தாக்கினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மகாராஜா துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கெங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாராஜா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp