தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் காலேப் ஹென். மருத்துவரான இவா், புதுக்கோட்டையில் தனது மருத்துவமனை அருகே தனது காரை கடந்த 13ஆம் தேதி நிறுத்திவிட்டு வெளியூா் சென்றாராம்.
பின்னா் கடந்த 18ஆம் தேதி வந்து பாா்த்தபோது, அவரின் காா், கைப்பேசி ஆகியவை திருட்டு போனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவா் புதுக்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.