பாடல் பாடுவதில் ஆர்வமுடைய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்காக தொடர்ந்து 24 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மியூசிக் அண்ட் மோர் ஸ்டுடியோவில் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மியூசிக் அண்ட் மோர் ஸ்டுடியோ மற்றும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோ செவன் க்ரீன் ஆகியோர் இணைந்து 24 மணி நேரம் தொடர் இன்னிசை நிகழ்ச்சி நடத்தி அசத்தியுள்ளனர்.இதில் கோவையை சேர்ந்த 79 பேர் கலந்து கொண்டனர்.இதே போல சென்னை ஸ்டுடியோ செவன் க்ரீன் அரங்கில் விஜயலட்சுமி மோகன் குமார் ஒருங்கிணைப்பில் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்..ஏட்டிக்கு போட்டி,பாட்டுக்கு பாட்டு என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குழந்தைகள்,ஆண்கள்,பெண்கள் வயதில் முதியவர்கள் கூட கலந்து கொண்டு பாடி அசத்தினர்..இதில் மருத்துவம், கணிணி துறை,சட்டம்,காவல்துறை என பல்வேறு துறை சார்ந்த, மேடைப்பாடகர்கள் அல்லாதவர்கள் கலந்து கொண்டு தங்களது அபிமான பாடல்களை பாடி மகிழ்ந்தனர்..இது குறித்து இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களும், ஸ்டுடியோ மியூசிக் அண்ட் மோர் இயக்குனர்கள் மகேஷ்ராஜன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் கூறுகையில்,மருத்துவம்,சட்டம்,கல்வி,என பல்வேறு துறை சார்ந்தவர்களின்,பாடல் பாடும் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தமிழ்,மலையாளம்,இந்தி என பல்வேறு மொழி பாடல்கள் மட்டும் அல்லாது,ஸ்லோகங்கள்,தமிழ் இலக்கிய பாடல்களையும் பாடி அசத்தினர்.
-சீனி போத்தனூர்