பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள்!
ஒட்டி உரசிய பேருந்துகளால் அச்சம்!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. அதனால் கோவையில் அநேக இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக தனியார் பேருந்து ஒன்றும். அதேபோல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு தனியார் பேருந்தும் காந்திபுரம் சென்றுள்ளது.
தொழில் போட்டி காரணமாக அந்த தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. அந்த பேருந்துகள் இரண்டும் பீளமேடு பகுதியில் சென்ற போது நடுரோட்டில் ஒன்றோடு ஒன்று உரசி மோதிய சம்பவம் பயணிகளை மிகவும் அச்சுறுத்தியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த விபத்து நடைபெற்றதும் அங்கு வந்த பெண் போக்குவரத்து காவலர் அந்த இரண்டு பேருந்துகளின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இது ஒரு புறம் இருக்க பேருந்துகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேருந்துகளை இயக்கும் இதுபோன்ற தனியார் பேருந்துகளில் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் அந்த ஓட்டுனர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பேருந்தில் பயணித்த பொதுமக்களிடம் கேட்டபோது, இவ்வாறு பேருந்து ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இயக்கப்பட்டு மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்காத வகையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.